தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீபெரும்புதூரில் சட்டவிரோதமாக பாரில் மது விற்பனை! - Illegal sale of alcohol

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் சட்டவிரோதமாக செயல்படும் பாரில் மது விற்பனை அமோகமாக நடைபெறுவது குறித்து, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூர்  பார்
ஸ்ரீபெரும்புதூரில் சட்டவிரோதமாக பாரில் மது விற்பனை

By

Published : Apr 21, 2021, 3:16 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை ஒட்டிய பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது.

காலை நேரத்தில் பார் திறந்திருப்பதால் மதுப்பிரியர்கள் வேலைக்குச் செல்லாமல் மதுவை அருந்தி, பார் இருக்கும் பகுதியிலேயே இருந்து விடுவதால் அநேக குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மதுவிற்பனை செய்யும் நேரத்தை குறைத்துள்ளதாக பெயரளவுக்கு கணக்கு காட்டி இதுபோன்ற சட்ட விரோதமாக மது விற்பனை செய்யும் பார்களுக்கு மாவட்ட நிர்வாகமும், அரசு அலுவலர்களும் துணை போவதால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.

ஸ்ரீபெரும்புதூர் பார்

எனவே, ஸ்ரீபெரும்புதூர் பாரில் சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனையை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details