தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஏய் அடிப்பேன், என்னப் பிரச்சினை, என்ன நடக்குது'- அமைச்சர் தா.மோ. அன்பரசன்! - ராமானுஜபுரம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே நேற்று (ஜுன் 5) நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் புகார் தெரிவித்த பொதுமக்களிடம், “ஏய் அடிப்பேன், என்ன நடக்குது” என அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறினார்.

அமைச்சர் அன்பரசன்
அமைச்சர் அன்பரசன்

By

Published : Jun 6, 2022, 9:05 AM IST

காஞ்சிபுரம்மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தின் பாப்பாங்குழி ஊராட்சியில் உள்ள வடந்தாங்கல் ஏரியின் புனரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். ஆர்த்தி தலைமையில் நேற்று (ஜுன் 5) நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராகத் தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துக்கொண்டு ரூ.8 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகளை அடிக்கல் நாட்டினார்.

புகாரளிக்க வந்த பொதுமக்களிடம், “ஏய் அடிப்பேன்” என கையை உயர்த்திய அமைச்சர் அன்பரசன்

அப்போது அங்கு ராமானுஜபுரம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள், குளம் சீரமைப்பு தொடர்பாக அமைச்சர் தா.மோ. அன்பரசனிடம் புகார் மனு அளித்து, பொதுப்பணி துறை சார்பாக விடப்படும் ஏலம் வேண்டாமென்று கோரிக்கை வைத்தனர்.

கிராம மக்கள் சார்பாக விடப்படும் ஏலத்தை செயல்படுத்த என்று கோரிக்கை விடுத்து பேசிக்கொண்டிருந்தப்போது, அமைச்சர் தா.மோ. அன்பரசன் சற்றும் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென கோரிக்கை வைக்க வந்திருந்த பொதுமக்களுள் ஒருவரை தனது கையை ஓங்கிக்கொண்டு, "ஏய் அடிப்பேன்" என்று கூறியபடி அடிக்க முற்பட்டார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள், திமுக கட்சியினர் எனப் பலரும் உடனிருந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையை ஏற்படுத்தியதோடு காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது.

இதையும் படிங்க:ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: ஆனைமலை புலிகள் காப்பக சோதனைச்சாவடியில் எம்.எல்.ஏ ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details