காஞ்சிபுரம்:பச்சையம்மன் கோயில் அருகே அன்னைதெரசா தெருவில் வசிப்பவர் கோபிநாத் (43) ஆட்டோ ஓட்டுநர். இவர் மனைவி கஸ்தூரி (36). கோபிநாத் தினமும் குடித்துவிட்டு அவரது மனைவி கஸ்தூரியிடம் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இன்று (ஆக.5) கோபிநாத் அளவுக்கதிகமான மது அருந்திவந்ததாக தெரிகிறது. கஸ்தூரியிடம் வழக்கம் போல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கோபிநாத் அருகிலிருந்த கடப்பாரையால் கஸ்தூரியை தலையில் பலமாக தாக்கி உள்ளார்.