தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோரா பட்டு விலை உயர்வை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் - கோரா பட்டு விலை 110 சதவிகிதம் உயர்வினை கண்டித்து போராட்டம்

காஞ்சிபுரத்தில் கோரா பட்டு விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பட்டு நகரத்தில் மனித சங்கிலி  போராட்டம்
பட்டு நகரத்தில் மனித சங்கிலி போராட்டம்

By

Published : May 11, 2022, 7:20 AM IST

பாரம்பரிய தொழிலான பட்டு சேலை உற்பத்தியில் மூலக்கூறான கோரா பட்டு விலை 110 சதவீதம் உயர்வை கண்டித்து காஞ்சிபுரம், கும்பகோணம், சிருமுறுகை, திருப்பூர் மையங்களில் நேற்று(மே.10) ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

அவ்வைகையில் பட்டு நகரமான காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலை, ஜவுளிக்கடைகள் அதிகமுள்ள காந்தி சாலையில் உள்ள 300-க்கும் மேற்பட்ட பட்டுச்சேலை விற்பனை கடைகள்,கோரா விற்பனை கடைகள்,பட்டு கூட்டுறவுச் சங்கங்கள் தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில் கடைகள் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் காஞ்சிபுரம் பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் அமைப்பு, பட்டு கடைகள் ,கூட்டுறவு சங்க அமைப்பு, அனைத்து தொழிற்சங்கம், அனைத்து வர்த்தக சங்க கூட்டமைப்பு, கோரா வர்த்தகங்கள் பங்கேற்றனர். போராட்டம் காரணமாக எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும் காந்தி சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு, பிரபல பட்டுச் சேலை விற்பனை கடைகளும் தங்களது ஆதரவை தெரிவித்திருந்தன. காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலைகளுக்கு புகழ்பெற்ற ஒரு சில பிரபலமான பட்டுச் சேலை விற்பனை கடைகள் முன் பக்க கடையின் ஷட்டர்களுக்கு மட்டும் பூட்டுப் போட்டு கடையடைப்பு செய்தது போல் மறைமுகமாக மாற்று வழியில் தங்களது விற்பனையை நடத்தினர்.

ஒரு சில கடைகள் முன் பக்க ஷட்டர்களின் பாதி மூடிவிட்டு பட்டுச்சேலை எடுக்க வந்த வாடிக்கையாளர்களை உள்ளே அழைத்து சென்றும் விற்பனையை நடத்தினர்.

இதையும் படிங்க:ஸ்ரீரங்கம் கோயிலில் பிரசாதமாக வழங்கப்பட்ட 5,000 லட்டுகள்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details