தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கம் மனித சங்கிலி போராட்டம் - kanchipuram latest news

காஞ்சிபுரம்: ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வலியுறுத்தி இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

human-chain-protest-in-kanchipuram
human-chain-protest-in-kanchipuram

By

Published : Dec 15, 2020, 4:16 PM IST

தமிழ்நாடு முழுவதும் உள்ள குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், வாதிரியார், பள்ளர், தேவேந்திர குலத்தான் ஆகிய 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வலியுறுத்தி இன்று காஞ்சிபுரத்தில் அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் பெரியார் சிலை அருகே நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் 30க்கும் மேற்பட்ட நபர்கள் கருப்பு சட்டை அணிந்துகொண்டு, முகக்கவசங்கள் இன்றி தங்கள் கைகளைக் கோர்த்துக்கொண்டு கரோனா விதிகளை கடைப்பிடிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:

தாயை திட்டியதால் அண்ணனை கொலை செய்த தம்பி கைது

ABOUT THE AUTHOR

...view details