காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே தேவரியம்பாக்கத்தில் உள்ள கேஸ் சிலிண்டர் குடோனில் நேற்று(செப்.28) மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து குறித்து பாரத் கேஸ் நிறுவனம் தரப்பில் இன்று(செப்.29) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த குடோனை ஏ.எஸ்.என். கேஸ் ஏஜென்சி என்ற பெயரில் ஜீவானந்தம் என்பவர் நடத்தி வந்தார். இங்கு இருந்து ஒரகடம் சுற்று வட்டார தொழிற்சாலைகளுக்கு வணிக ரீதியான கேஸ் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டு வந்தன.
தேவரியம்பாக்கம் கேஸ் சிலிண்டர் விபத்து நடந்தது எப்படி...? இந்த நிலையில், நேற்று (செப்.28) மாலை டாடா ஏஸ் வாகனத்தில் 990 லிட்டர் கொள்ளவு கொண்ட பெரிய சிலிண்டர் ஒன்றை குடோனில் இறக்கும் போது, தவறுதலாக கீழே விழுந்ததில் வால்வு உடைந்து கேஸ் கசிந்தது. இதனால் பதற்றமடைந்த டாடா ஏஸ் ஓட்டுநர் வாகனத்தை உடனே இயக்கியதால் கசிந்த கேஸ் தீப்பற்றி பயங்கர தீ விபத்து நடந்ததாக பாரத் கேஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவரியம்பாக்கம் கேஸ் சிலிண்டர் விபத்து நடந்தது எப்படி...? இந்த தீ விபத்து குறித்து பாரத் கேஸ் நிறுவனத்தின் வணிக மேலாளர் சுபட்வெப் டேப்நாத் மற்றும் சென்னை அண்ணா நகர் விற்பனை அதிகாரி ஸ்வப்னில் ஶ்ரீவஸ்தவா ஆகியோர் இன்று (செப்.29) சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அதேபோல் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் ஆர்நிஷா பிரியதர்ஷினி தீயணைப்புத்துறையினருடன் தீ விபத்து நடைபெற்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின் போது காஞ்சிபுரம் வருவாய் கோட்டாச்சியர் கனிமொழி, வாலாஜாபாத் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளும் உடனிருந்தனர். இந்த தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய தடயவியல் துறையினர் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்துள்ளனர்.
இதையும் படிங்க: வாலாஜாபாத் கேஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்து; 5 பேர் மீது வழக்குப்பதிவு