தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் - sriperumbudur toll plaza heavy traffic jam

காஞ்சிபுரம்: பொங்கல் விடுமுறை முடிந்து வெளியூர் சென்றவர்கள் அதிகளவில் வாகனங்களில் சென்னை திரும்புவதால் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

sriperumbudur toll plaza heavy traffic
ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்

By

Published : Jan 17, 2021, 8:48 PM IST

பொங்கல் பொது விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் இன்று சென்னைக்கு திரும்பியதால் சென்னை புறநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை முடிந்து நாளை பணிக்கு செல்ல அனைவரும் சென்னை நோக்கி படையெடுத்துவருகின்றனர். இதனால் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்

ஒரே நேரத்தில் 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து காணப்பட்டன. ஒவ்வொரு காரும் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியை ஆமை வேகத்தில் கடந்தன. இதனால் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையும் படிங்க:சென்னைக்கு மேலும் அழகு சேர்க்கும் தூண் பூங்கா!

ABOUT THE AUTHOR

...view details