காஞ்சிபுரம்:இறைச்சி வாங்குவதற்காக, அசைவப் பிரியர்கள் குவிந்ததை, அம்மாவட்ட நகராட்சி நிர்வாக, காவல்துறை அலுவலர்கள் கண்டுகொள்ளாமல் விட்டது, தொற்று பரவலை மேலும் அதிகரிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கரோனா இரண்டாம் அலை வெகுவாக குறைந்து வரும் நிலையில், அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை படிப்படியாக அமல்படுத்திவருகிறது.
இன்று(ஜூன்.13) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், பொன்னேரி கரை, பெரிய காஞ்சிபுரம் தர்கா உள்ளிட்ட பகுதிகளில், இறைச்சி வாங்குவதற்காக அசைவப் பிரியர்கள் குவிந்தனர்.
கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு நாளை (ஜூன்.14) முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், இன்று (ஜூன்.13) இறைச்சி வாங்குவதற்காக, கரோனா அச்சம் ஏதுமின்றி, பொது மக்கள் காஞ்சிபுரம் முழுவதும் சுற்றி வருகின்றனர்.
இறைச்சி வாங்க குவிந்த அசைவப் பிரியர்கள்! பொது மக்களை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் காவல் துறையினரோ, நகராட்சி நிர்வாகமும், எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாத அவலநிலை, காஞ்சிபுரம் பகுதியில் ஏற்பட்டுள்ளது.
தற்போது நோய்த்தொற்று குறைந்துவரும் நிலையில், இவ்வாறு மக்கள் கூட்டம், கூட்டமாக சுற்றினால், மீண்டும் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை வேகமெடுக்கும் சூழல் உருவாகும்.
இதையும் படிங்க: கார் கவிழ்ந்து விபத்து: 2 பாதிரியார்கள் உயிரிழப்பு!