செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கருங்குழி பேரூராட்சி உள்ளது. இங்கு 15 வார்டுகள் உள்ளன. பேரூராட்சி செயல் அலுவலராக உள்ள மா.கேசவன் தலைமையில் காந்தி-150 பூங்கா வளாகத்தில் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த சுகாதாரத் திருவிழா நிகழ்ச்சியில் சுகாதரத்தின் முக்கியத்துவம், சுற்றுச்சூழலை துய்மையாக வைத்துக்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேஜிக் ஷோ, பள்ளிக் குழந்தைகளின் பரதநாட்டியம், கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாணயக் கண்காட்சி நடைபெற்றன.