தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆறுபடைவீடு தொழில்நுட்ப கல்லூரி பட்டமளிப்பு விழா! - கல்லூரி அளவில் முதல் இடம் பிடித்த வேல்முருகன்

காஞ்சிபுரம்: மாமல்லபுரம் அருகே உள்ள ஆறுபடைவீடு தொழில்நுட்ப கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

கல்லூரி அளவில் முதல் இடம் பிடித்த வேல்முருகன்

By

Published : Sep 6, 2019, 11:56 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம், பையனூரில் அமைந்துள்ள ஆறுபடைவீடு தொழில்நுட்பக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று 18ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழா, கல்லூரியின் இயக்குநர் டாக்டர் அனுராதா கணேசன் தலைமையில் நடைபெற்றது.

ஆறுபடைவீடு தொழில்நுட்ப கல்லூரி பட்டமளிப்பு விழா

இதில், சிறப்பு விருந்தினராக இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு துறையின் மேலாண் இயக்குநர் டாக்டர் ஆதித்யன் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார். இவ்விழாவில் மொத்தமாக 250 மாணவ மாணவிகள் பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

மேலும், கல்லூரி அளவில் துறை வாரியாக முதலிடம் பிடித்த மாணவிகளுக்கு ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பிலான ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. மேலும், கல்லூரி அளவில் முதல் இடம் பிடித்த வேல்முருகன் என்ற மாணவருக்கு பல்கலைக்கழக நிறுவன வேந்தர் டாக்டர் ஏ.சண்முகசுந்தரம் நினைவு பரிசாக தங்கப் பதக்கமும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் அவருக்கு வழங்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details