காஞ்சிபுரம்: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வேளாண் துறை, மகளிர் திட்டம் சார்பில் அரசு நலத்திட்ட வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது.
காஞ்சியில் ரூ.1.37 கோடி மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகள்!
காஞ்சிபுரத்தில் 449 பயனாளிகளுக்கு ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு ஊரக தொழில் துறை அமைச்சா் பெஞ்சமின் வழங்கினார்.
இதில் சிறப்பு விருந்தினராகத் தமிழ்நாடு ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் பங்கேற்றார். பின்னர் 449 பயனாளிகளுக்கு ரூபாய் 1.37 கோடி மதிப்பீட்டில் வேளாண் இடுபொருள்கள், பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பான்கள் , வேளாண் உபகரணங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி உதவி, அம்மா இருசக்கர வாகன திட்டத்தின்கீழ் பெண்களுக்கு இருசக்கர வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் பழனி, மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) நாராயணன், முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம், சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஜீவா, அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.