தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு கொள்முதல் நிலையம் திறப்பு! - காஞ்சி மாவட்ட விவசாயிகள்

காஞ்சிபுரம்: பரந்தூர் கிராமத்தில் அரசு கொள்முதல் நிலையத்தினை இன்று (ஜூன் 24) சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன் திறந்து வைத்தார்.

Government procurement center opens at farmers's request in kanchipuram
Government procurement center opens at farmers's request in kanchipuram

By

Published : Jun 4, 2021, 10:48 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் பரந்தூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு பரந்தூர்,பள்ள பரந்தூர், நாகப்பட்டு, காட்டுப்பட்டூர் ஆகிய கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டது.

பின்னர் அறுவடை செய்த நெல்லை குவியல் குவியலாக களத்து மேட்டிலும், கிராம வீதிகளிலும், நெடுஞ்சாலையிலும் விவசாயிகள் கொட்டி வைத்துக்கொண்டு, நெல்மணிகளை விற்பனை செய்ய அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர். கோரிக்கை விடுத்து 2 மாதங்களுக்கும் மேலாகியும் அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் வீணாகிவரும் நெல்லை கொண்டு சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அலுவலக வளாகத்திலும் கொட்ட உள்ளதாகவும்,

அதனால் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு அரசு நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை அறிந்து, காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன் அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு பரந்தூர் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிட்டது.

மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் இன்று பரந்தூர் கிராமத்தின் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவு செய்யும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன், விவசாயிகளின் முன்னிலையில் திறந்து வைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details