காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த பட்டமுடையார் குப்பத்தில் வசித்துவருபவர் சண்முகம். சென்னை பல்கலைக்கழக அலுவலராக இவர் பணியாற்றிவருகிறார். மேலும் இவர் பட்டமுடையார் குப்பத்தில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் வீடு, தோட்ட பயிர் செய்து மனைவியுடன் வசிக்கிறார். இவரது மகன் கனடா நாட்டில் வசித்துவருகிறார்.
கத்தியைக் காட்டி மிரட்டல்
இந்நிலையில் இன்று(டிச.16) அதிகாலை 2 மணி அளவில் இவரது வீட்டில் நுழைந்த நான்கு முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர்கள் சண்முகம் மற்றும் அவரது மனைவி சுகன்யாவை கத்தியை காட்டி மிரட்டி கழிவறைக்குள் தள்ளியுள்ளனர்.
அதுமட்டுமின்றி அவர்கள் அணிந்திருந்த நகை , வீட்டிலிருந்த நகைகள் என்று சுமார் 30 சவரன் நகையை கொள்ளையடித்து, சண்முகத்தின் மொபைல் போன்களையும் பறித்து தப்பி ஓடியுள்ளனர்.
களத்தில் காவல் துறை