தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Gold jewellery and money robbery: வீட்டிலிருந்த பெண்களிடம் கத்தி முனையில்  நகை, பணம் கொள்ளை - தங்க நகை கொள்ளை

Gold jewellery and money robbery: காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் வீட்டிலிருந்த பெண்களிடம் கத்தி முனையில் 80 சவரன் தங்க நகை மற்றும் 5 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து காஞ்சி தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.

பணம் கொள்ளை
பணம் கொள்ளை

By

Published : Dec 23, 2021, 10:45 PM IST

Gold jewellery and money robbery:காஞ்சிபுரம் மாவட்டம்,மாமல்லன் மெட்ரிக் பள்ளி அருகே மாருதி நகரில் ஆடிட்டர் மேகநாதன் என்பவர் வசித்து வருகிறார்.

இவருக்கு 2 சகோதரர்கள் உள்ளனர். இவர்கள் மூவரும் திருமணமாகி ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் வழக்கம் போல அவர்கள் இன்று(டிச.23) பணிக்குச் சென்று விட்ட நிலையில் வீட்டில் 3 சகோதரர்களின் மனைவிகள் மட்டுமே இருந்துள்ளனர். அப்பொழுது மதியம் சுமார் 1 மணி அளவில் திடீரென்று அந்த வீட்டில் முகமூடி அணிந்த 4 நபர்கள் கத்தியுடன் நுழைந்துள்ளனர்.

சற்றும் எதிர்பாராத விதமாக பெண்கள் மூவரும் கூச்சலிடத் தொடங்கியபோது, கையிலிருந்த ஆயுதங்களைக் காட்டி மூன்று பேரையும் மிரட்டியுள்ளனர். சத்தம் போட்டால், குத்திக் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் அவர்களும் வேறு வழி இல்லாமல் அமைதியாக இருந்துள்ளனர்.

சினிமாவை மிஞ்சும் கொள்ளை

அதையடுத்து அவர்களது கை, கால்களை கட்டிப்போட்டு, கழுத்தில் அணிந்திருந்த நகைகள் உட்பட வீட்டிலிருந்த சுமார் 80 சவரன் நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூபாய் 5 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை முகமூடி அணிந்து வந்த நான்கு கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காஞ்சி தாலுகா காவல்துறையினர் தடயங்களை சேகரித்து, கொள்ளைச்சம்பவம் குறித்து வீட்டிலிருந்த பெண்மணிகளிடம் விசாரணை நடத்தினர்.

வீட்டில் இருந்த பெண்களிடம் கத்தி முனையில் கொள்ளை

இதனையடுத்து அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அதில் அப்பகுதியில் கடந்த சில மணி நேரத்திற்கு முன்பு சந்தேகத்திற்கிடமான வகையில் இருவர், அந்த வீட்டின் அருகே நோட்டமிட்டதை காவல் துறையினர் உறுதிப்படுத்தி உள்ளனர்.

அந்த சிசிடிவி காட்சிகள் மூலமாக சம்பந்தப்பட்ட இருவரும் யார் என்பது குறித்தும், தற்போது காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்தக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ராஜேந்திர பாலாஜிக்கு செக்... ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!

ABOUT THE AUTHOR

...view details