காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 வருடங்களுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கி வெகுவிமர்சையாக நடைபெற்றது. வைபவத்தின் கடைசி நாளான இன்று, பொதுமக்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
மீண்டும் குளத்திற்கு செல்கிறார் அத்திவரதர்! - அத்திவரதர்
காஞ்சிபுரம்: அத்திவரதர் வைபவத்தின் கடைசி நாளான இன்று பட்டாச்சாரியார்கள் பூஜைக்கு பிறகு மீண்டும் அத்திவரதர் குளத்திற்கு செல்கிறார்.
காஞ்சிபுரம்
பட்டாச்சாரியார்கள் பூஜைக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில், துப்புரவு பணியாளர்கள், மின்சார ஊழியர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள் வழக்கமான பணியை செய்து வருகின்றனர்.
பட்டாச்சாரியார்கள் பூஜைக்கு பின்பு இரவு 9 மணிக்கு மேல் அத்திவரதர் சிலை, அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட இருக்கிறது. இதன் பின்பு அத்திவரதரை காண 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.