தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக, காங்கிரஸ் கூட்டணி விமர்சித்த ஜி.கே.வாசன்! - congress

காஞ்சிபுரம்: மதவாதம் என்ற சொல்லை திமுக, காங்கிரஸ் கூட்டணி தவறாக பயன்படுத்தி வருகிறது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

GK vaasan

By

Published : Apr 3, 2019, 10:57 AM IST

Updated : Apr 3, 2019, 12:21 PM IST

காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் காஞ்சிபுரம் சங்கரமடம் அருகே பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், ‘தமிழ்நாட்டில் பெரும்பான்மை மக்களும் சிறுபான்மையினர் மக்களும் சகோதரர் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். தமிழ்நாடுஅமைதிப் பூங்காவாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது’ என கூறினார்.


மேலும் பேசிய அவர், ‘மதச்சார்பின்மை பற்றி இனி பேசுவதற்கு திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சிக்கு எந்த தகுதியும் இல்லை என்பதை நிரூபித்து கொண்டிருக்கிறார்கள். ஒன்பது நாடாளுமன்றத் தொகுதியை காங்கிரஸ் பெற்றுக்கொண்டு ஒரு இஸ்லாமியரையோ அல்லது கிறிஸ்தவரையோ வேட்பாளரை நிறுத்தாமல் மதச்சார்பின்மையற்ற கட்சி என்கின்ற தன் தகுதியை இழந்துவிட்டது. தமிழ்நாட்டில் திமுக காங்கிரஸ் கூட்டணி சிறுபான்மையினரை ஏமாற்றுகிறது’ என அவர் விமர்சித்தார்.

திமுக, காங்கிரஸ் கூட்டணி விம்ர்சித்த ஜிகே வாசன்!

Last Updated : Apr 3, 2019, 12:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details