காஞ்சிபுரம்:பாஜகவின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு தலைமையில் காஞ்சிபுரத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவர் நடிகை காயத்ரி ரகுராம் கலந்துக்கொண்டு கட்சி வளர்ச்சி குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் இந்த செயற்குழு கூட்டத்தில் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும், காஞ்சி மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த காயத்ரி ரகுராம், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பள்ளி மாணவி உயிரிழப்பு சம்பவத்தில் உண்மை தன்மையை கண்டறிய அரசு உடனடியாக விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். கனிமொழி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் குறிப்பாக ட்விட்டரில் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.