தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சியில் 29ஆம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்! - Gas Consumer Grievance Meet

காஞ்சிபுரம்: வருகின்ற 29ஆம் தேதியன்று எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறுகிறது.

Gas Consumer Grievance Meeting on 29th in Kanchipuram
Gas Consumer Grievance Meeting on 29th in Kanchipuram

By

Published : Dec 22, 2020, 6:15 PM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கும் எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் காலதாமதம், நுகர்வோர் குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவர்களிடம் ஏற்படும் காலதாமதம் ஆகிய குறைபாடுகள் இருந்துவருகிறது.

இதனைக் களைய எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உள்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தை சீர்படுத்திடும் நோக்கில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 29ஆம் தேதி காலை 11 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் தவறாது கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறவேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details