காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தாயார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன்(24). கஞ்சாவுக்கு அடிமையான இவர், கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இவருக்கும், பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்த ஆணை என்ற ஆனந்தனுக்கும் கஞ்சா விற்பனை செய்வதில் தகராறு இருந்துவந்துள்ளது.
இந்நிலையில், ஐயப்பனை 26ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
காணமால் போன இளைஞர் கொலை
புகாரை ஏற்றுக்கொண்ட சிவகாஞ்சி காவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து ஐயப்பனை தேடிவந்தனர். மேலும், ஆணை என்ற ஆனந்தனிடமும் காவலர்கள் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், ஐயப்பனை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்து, முத்துவேடு ஊராட்சிக்குட்பட்ட பிச்சவாடி கிராம சுடுகாட்டுக்குச் செல்லும் வழியில் ஆற்றில் பள்ளம் தோண்டி புதைத்தது தெரியவந்தது.