கரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் இந்தத் தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு மூன்றாவது வாரமாக முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூரில் மூன்றாவது வார ஞாயிறு முழு ஊரடங்கு - Corona death
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி மூன்றாவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
![ஸ்ரீபெரும்புதூரில் மூன்றாவது வார ஞாயிறு முழு ஊரடங்கு Full curfew on Sunday following the third week in Sriperumbudur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-01:41:30:1595146290-tn-che-03-fulllockdown-visual-script-7208368-19072020120004-1907f-1595140204-968.jpg)
Full curfew on Sunday following the third week in Sriperumbudur
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 3ஆவது ஞாயிற்றுக் கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் முழுவதும் காய்கறி சந்தைகள், பெட்ரோல் நிலையங்கள், வணிக நிறுவனங்கள் சிறு கடைகள் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
ஸ்ரீபெரும்புதூரில் முக்கிய சாலைகளான சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, திருவள்ளூர் சாலை காந்தி ரோடு தோட்டக்காரர் தெரு, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகள் முக்கிய சாலைகளில் வாகனம் எதுவும் செல்லாமல் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.