காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகன் சந்துரு (4). வீட்டின் அருகேவுள்ள அவரது சித்தியின் வீட்டில் சந்துரு விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, கட்டிலுக்கு அடியில் சென்று விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த பாம்பு சிறுவனின் காலில் கடித்துள்ளது. உடனே சிறுவன் அலறி கூச்சலிட்டபடி அழுதுள்ளான்.
பின்னர், சிறுவனின் காலில் பாம்பு கடித்ததையறிந்த அவரது பெற்றோர், உடனடியாக சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பாம்பு கடித்து உயிரிழந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சில நிமிடங்களிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த ஒரகடம் காவல் துறையினர் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: தண்ணீர் சேகரிக்கும் குழியில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு