முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் கைச்சிலம்பம் ஆடி பொதுமக்களிடம் வாக்குச் சேகரிப்பு - தேனம்பாக்கம்
காஞ்சிபுரம் ஒன்றியம் தேனம்பாக்கம் பகுதிகளில் உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் ஏராளமான பொதுமக்கள் முன்னிலையில் கைச்சிலம்பம் ஆடி பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டார்.
அமைச்சர் வி.சோமசுந்தரம் கைச்சிலம்பம் ஆடி பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் உத்திரமேரூர் தொகுதிக்குள்பட்ட காஞ்சிபுரம் ஒன்றியம் ஐஞ்சூர், தேனம்பாக்கம், காமாட்சி நகர், அண்ணா நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்நிகழ்வின்போது அதிமுக கழக அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் பா கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, காஞ்சி மேற்கு ஒன்றியச் செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகளும் கூட்டணிக் கட்சியினரும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, ஏராளமான பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும், நடனக்குழுவினர் நடனமாடியும் உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருக்கு பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: எங்களை சுடுகாட்டில் போட்டுச் செல்லுங்கள்' - சீமான் ஆதங்கம்