உத்திரமேரூரை அடுத்த மதூர் கிராமத்திலுள்ள தனியார் கல் குவாரியில் இன்று ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜே.சி.பி. வாகனங்கள் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், மோப்ப நாய்களின் உதவுயுடன் கல் சரிவில் யாரேனும் சிக்கியுள்ளார்களா எனவும் தேடி வருகின்றனர்.
கல்குவாரி விபத்து! - சைலேந்திரபாபு நேரில் ஆய்வு! - கல்குவாரி விபத்து
காஞ்சிபுரம்: தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை டிஜிபி சைலேந்திரபாபு நிகழ்விடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
quarry
இந்நிலையில், விபத்து நடந்த இடத்தை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சென்று ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, மாநில பேரிடர் மீட்புத்துறை என பல துறையினரும் முகாமிட்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கல்குவாரி விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்