தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதியில் ரவுடி வேட்புமனு தாக்கல் - etv news

ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக பிரபல ரவுடி குன்றத்தூர் வைரம் என்பவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஸ்ரீபெரும்புதூர் தனித் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக பிரபல ரவுடி வேட்பு மனு தாக்கல்
ஸ்ரீபெரும்புதூர் தனித் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக பிரபல ரவுடி வேட்பு மனு தாக்கல்

By

Published : Mar 17, 2021, 2:43 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக பிரபல ரவுடியும் தொழில் அதிபருமான குன்றத்தூர் வைரம் என்பவர் போட்டியிடுகிறார். அதையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியருமான முத்து மாதவனிடம் பிரபல ரவுடி வைரம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து, 3000 ஆயிரத்துக்கும் அதிகமான ஆதரவாளர்களுடன் பிரபல ரவுடி வைரம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்கு, ஸ்ரீபெரும்புதூர் சென்னை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம்வரை பேரணியாக வந்ததால் ஸ்ரீபெரும்புதூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில், பிரபல ரவுடி வைரம் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஸ்ரீபெரும்புதூரில் குவிக்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையுன் படிங்க: இந்தியாவில் தொடர்ந்து உயரும் கோவிட்-19; ஒரு நாளில் 28,903 பேருக்கு பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details