40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜுலை மாதம் 1ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நடைபெற்றது. முதல் 31 நாட்கள் அத்திவரதர் சயன கோலத்திலும், அடுத்த 17 நாட்கள் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அலைகடலென திரண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். 8 நாட்களில் ஒரு கோடிக்கும் மேலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அத்திவரதர் தரிசனத்திற்கு போலி விஐபி பாஸ் - 11 பேர் கைது
காஞ்சிபுரம்: அத்திவரதர் தரிசனத்திற்கு போலி விஐபி பாஸ் விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Fake VIP Pass
அந்தவகையில் தரிசனம் செய்வதற்காக விஐபி, விவிஐபி என சிறப்பு தரிசனம் செய்ய முக்கிய கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டவர்களுக்கு டோனர் பாஸ் வழங்கப்பட்டது. இதில் விஐபி பாஸ்கள் பலவும் போலியான முறையில் அச்சடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பாஸ்களை போலியாக அச்சடித்து விற்ற நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் தனசேகர், பிலால், ஜருத்தின், விஷ்ணு செந்தில், அப்துல் காதர் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.