காஞ்சிபுரம்அடுத்துபுளியந்தோப்பு பகுதியைச்சேர்ந்தவர் தாமோதரன் (வயது 38). இவரும் திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த சபரீஷ் ஆகிய இருவரும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடு பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சம்பத் என்பவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுபேசினார்.
அப்போது, ’செங்காடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளை மிரட்டிப்பணப்பறிப்பில் ஈடுபட்டு வர்றீங்க. உங்க மீது தொடர்ந்து அடுக்கடுக்கான புகார்கள் வருகிறது. உன் மீது வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமானால், எனக்கு பணம் அளிக்க வேண்டும்’ என இருவரும்(தாமோதரனும் சபரீஷும்) சம்பத்தை மிரட்டி உள்ளனர்.
இதையடுத்து சம்பத்தை தண்டலம் பகுதிக்கு வரவழைத்து பேரம் பேசி ரூ.7 லட்சம் பணத்தை அளிக்கும்போது தாமோதரன், சபரீஷ் ஆகிய இருவர் மீதும் சம்பத்துக்கு சந்தேகம் எழுந்தது. பணத்தை அளித்த பின்னர் இது குறித்து சம்பத் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.