தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அத்தி வரதர் வைபவத்தைக் காண சிறப்பு ஏற்பாடு - சேவூர் ராமச்சந்திரன் - festival

காஞ்சிபுரம்: அத்தி வரதர் வைபவத்தின் பக்தர்கள் சிறப்பாக தரிசனம் மேற்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

அத்தி வரதர் வைபவம்

By

Published : Jun 30, 2019, 9:52 AM IST

காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற வரதராஜர் திருக்கோயில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஆதி அத்தி வரதர் வைபவம் வரும் ஜூலை 1ஆம் தேதி காலை 5 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்டோர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ‘ஆதி அத்தி வரதர் வைபவம் சிறப்பாக நடைபெற அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைக்கப்பட்டு பக்தர்களுக்கு சிறப்பான வசதிகளை அமைத்துள்ளனர். இதனை பயன்படுத்தி பொதுமக்கள் சாமி தரிசனம் மேற்கொள்ளலாம் என தெரிவித்தார். மேலும், அத்திவரதர் வைபவத்தையொட்டி செய்தி விளம்பரத்துறை சார்பில் அரசு பொருட்காட்சி காஞ்சிபுரம் மேட்டு தெரு அருகில் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

அத்தி வரதர் வைபவம்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி உத்தரமேரூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வாலாஜாபாத் கணேசன், அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details