தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அனைத்து சாதியினரையும் அரவணைத்து தேர்தலில் வெற்றி பெறுவோம்' - கோகுல இந்திரா - தேர்தல் பரப்புரை

காஞ்சிபுரம்: வரும் சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து சாதியினரையும் அரவணைத்து வெற்றி பெற வேண்டும் என முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா
முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா

By

Published : Dec 22, 2020, 8:06 PM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் அம்மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதி பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக அதிமுக செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது, ”தமிழ்நாடு அரசு சார்பில் மக்களுக்கு பாரபட்சமின்றி நலத்திட்டங்கள் செய்யப்படுகின்றன. இவை அனைத்தும் சாதி பேதமின்றி செய்யப்படுகிறது.


அனைத்து சாதியினரையும் அரவணைத்து, எந்த சாதியினரையும் ஒதுக்காமல் கூட்டங்கள் நடத்தவேண்டும். அரசு செய்துவரும் சாதனைகளை கூறி வாக்குகளை சேர்க்க வேண்டும். அனைத்து தரப்பு நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற பாடுபட வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க:‘அதிமுகவை நிராகரிப்போம்’: தீர்மானத்தை நிறைவேற்றவுள்ள ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details