தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு பேரணி!

காஞ்சிபுரம்: சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்கள் 100 விழுக்காடு வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் நடைபெற்ற பள்ளி மாணவர்களின் தேர்தல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கிவைத்தார்.

காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவர்களின் தேர்தல் விழிப்புணர்வு பேரணி  தேர்தல் விழிப்புணர்வு பேரணி  தேர்தல் விழிப்புணர்வு பேரணி  Election Awareness Rally of School Students in Kanchipuram  Election Awareness Rally  Election Awareness Rally of School Students
Election Awareness Rally

By

Published : Mar 6, 2021, 1:10 PM IST

சட்டப்பேரவைத் தேர்தலில் 100 விழுக்காடு வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் பரப்புரைகள், பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவர்களின் தேர்தல் விழிப்புணர்வு பேரணி இன்று (மார்ச்6) நடைபெற்றது. மூங்கில் மண்டபம் பகுதியில் இப்பேரணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மகேஸ்வரி ரவிக்குமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இந்தப் பேரணயில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 100 விழுக்காடு வாக்கு செலுத்த வேண்டும், வாக்களிப்பது உங்கள் உரிமை, வாக்களிப்பது ஜனநாயக கடமை, வாக்களிக்க பணம் வாங்கக் கூடாது உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாரு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பள்ளி மாணவர்களின் தேர்தல் விழிப்புணர்வு பேரணி

இந்தப் பேரணி நகரின் முக்கிய பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாக காஞ்சிபுரம் பெருநகராட்சி அலுவலகம் முன்பு வரை சென்று நிறைவுப்பெற்றது. இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:சட்டப்பேரவை தேர்தலையொட்டி கொடி அணிவகுப்பு பேரணி!

ABOUT THE AUTHOR

...view details