தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி, பேரணி! - உலக மகளிர் தினம்

காஞ்சிபுரம்: உலக மகளிர் தினத்தையொட்டி மகளிர் சுய உதவிக் குழுக்களைக் கொண்டு தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி மற்றும் பேரணி நடைபெற்றது.

kanchipuram
kanchipuram

By

Published : Mar 8, 2021, 5:43 PM IST

உலக மகளிர் தினத்தையொட்டி தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு வண்ணக் கோலப்போட்டி மற்றும் பேரணி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 200 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு தேர்தல் விழிப்புணர்வை வலியுறுத்தி வண்ணக் கோலமிட்டனர். இதனை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மகேஸ்வரி ரவிக்குமார் பார்வையிட்டு, வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட பேரணியையும் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். பொதுமக்களுக்கும், வாக்காளர்களுக்கும் தேர்தல் குறித்த விழிப்புணர்வு குறித்த பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றது.

தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி, பேரணி!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர், டி.ஐ.ஜி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர், வருவாய் கோட்டாச்சியர், வட்டாசியர், பெருநகராட்சி ஆணையர் என சுமார் 90 விழுக்காடு பெண்களே அரசு உயர் பதவிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சட்டப்பேரவையில் ஆணுக்கு நிகர் பெண்? - மத்திய அரசு முடிவெடுக்க உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details