செங்கல்பட்டில் நேற்று மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கல்வி பாதுகாப்பு விழிப்புணர்வுப் பரப்புரை நடைபெற்றது. மத்திய அரசின் புதிய கல்வித் திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன் அதனை சட்ட ரீதியாக கொண்டுவருவதற்கு மாநில அரசு குறிப்பாக முக்கியத்துவம் காட்டுவதால் அதனை எதிர்த்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பரப்புரையில் ஈடுபட்டனர்.
’மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும்’ - Education awareness program
காஞ்சிபுரம்: மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் விழிப்புணர்வுப் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வைக்கும் கொள்கையை மத்திய அரசு கொள்கையே திரும்பப் பெற வேண்டும் எனவும், அரசுப் பள்ளிகளை மூடக் கூடாது எனவும் கூறி மக்களிடையே விழிப்புணர்வை ஆசிரியர்கள் ஏற்படுத்தினர். தமிழ் வழிப் பள்ளிகளை அழிக்க வேண்டாம் என்றும், தொடக்கக் கல்வித் துறையை சீரழிக்கும் அரசாணை 145 ஐ திரும்பப்பெற வேண்டும் என்றும் கூறி பரப்புரை செய்தனர்.
பணம் உள்ளவர்கள் படிக்கட்டும் பணம் இல்லாதவர் கெட்டுவிடட்டும் என்கின்ற மத்திய அரசின் எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூட்டமைப்பின் சார்பாக ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டனர். இந்த விழிப்புணர்வுப் பரப்புரையானது வருகிற 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.