காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில், உணவு உண்ணும் முறை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "உகந்த உணவை உண்போம் இயக்கம்" (Eat Right) தொடக்க விழா ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று "உகந்த உணவை உண்போம் இயக்கத்தினை" (Eat Right) தொடங்கி வைத்தார். உகந்த உணவை உண்போம் (Eat Right) காஞ்சிபுரம் இலட்சினையும், விழிப்புணர்வு குறும்பாடல், குறும்படங்கள், சமூக வலைதள பக்கங்களையும் வெளியிட்டு தொடங்கிவைத்தார்.
அப்போது, ஆட்சியர் தலைமையில் ஈட் ரைட் விழிப்புணா்வு உறுதிமொழி எடுக்கப்பட்டு விழா ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பாரம்பரிய உணவுக் கண்காட்சியினை பார்வையிட்ட ஆட்சியர், உணவு பாதுகாப்பு விழிப்புணா்வு வாகனம், நடமாடும் உணவு ஆய்வகம், நோ புட் வேஸ்ட் வாகனம் ஆகியவற்றை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
பின்னர் சிறப்புரையாற்றிய ஆட்சியர், "இன்று முதல் நமது உடல் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்தி, பாதுகாப்பான சத்தான சரிவிகித உணவு உட்கொண்டு நலமுடன் வாழ்வோம். மற்றவர்களுக்கும் சரிவிகித உணவை உட்கொண்டு நலமுடன் வாழ அறிவுறுத்த வேண்டும்.