தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’திமுகவை விட டிடிவி.தினகரனால்தான் அதிக தொல்லை’ - திமுக

காஞ்சிபுரம்: அதிமுகவையும், ஆட்சியையும் ஒழிக்க திமுகவை விட அதிகம் தொல்லை கொடுத்தவர் டிடிவி. தினகரன்தான் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

manian
manian

By

Published : Feb 9, 2021, 3:30 PM IST

காஞ்சிபுரத்தில் உள்ள சங்கரமடத்திற்கு இன்று வந்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதியை நேரில் சந்தித்து சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக தனி அறையில் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் அங்கு நடைபெற்ற பூஜையில் பங்கேற்ற அவர், காமாட்சியம்மன் கோவிலுக்கும் சென்று வழிபட்டார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், “திமுகவை விட அதிமுகவையும், ஆட்சியையும் ஒழித்துவிட வேண்டும் என அதிகம் எண்ணியவர் டிடிவி.தினகரன். தினகரன் கட்சி ஆரம்பித்து கட்சிக் கொடியையும், சின்னத்தையும் வேட்பாளர்களையும் அறிவித்த போது, அவரது செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆசி வழங்கிவிட்டு, இப்போது வந்து அதிமுகவை சசிகலா உரிமை கொண்டாடுவதில் என்ன நியாயம் இருக்கிறது.

’திமுகவை விட டிடிவி.தினகரனால்தான் அதிக தொல்லை’

சசிகலாவை அதிமுகவில் இணைக்கும் விவகாரத்தில் தொண்டர்களின் எண்ணம் என்னவோ, விருப்பம் எதுவோ அதைத் தான் ஓபிஎஸ்-இபிஎஸ் செய்வார்கள். வரும் தேர்தலில் மூன்றாவது முறையும் எங்களைத்தான் மக்கள் அரியணையில் ஏற்றுவார்கள்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: தொட்டுவிடும் தொலைவில் சீன ஆபத்து, என்ன செய்யப்போகிறது இந்தியா? -ராமதாஸ் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details