தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுபோதையில் தாயை கழுத்தறுத்து கொலை செய்த மகன் கைது! - Sriperumbudur latest murder

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே மதுபோதையில் தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகனை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூர்

By

Published : Jul 28, 2020, 8:01 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பதூர் அருகே கீவலூர் பகுதியில் வசித்துவருபவர் துரை, இவர் கூலி வேலை செய்துவருகிறார். இவரது மனைவி கோவிந்தம்மாள். இந்தத் தம்பதிக்கு ஆனந்தன் (30) என்ற மகன் உள்ளார். தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் ஆனந்தனுக்கு, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

மதுபழக்கம் உள்ள ஆனந்தன் தினம்தோறும் குடித்துவிட்டு, மனைவியுடன் பிரச்னையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஆனந்தனின் மனைவி கடந்த மாதம் அவரின் அம்மா வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூலை 26) ஆனந்தனின் தந்தை துரை வேலைக்குச் சென்றார். அப்போது வீட்டில் மதுபோதையில் தனியாக இருந்த ஆனந்தன், அவரின் தாயின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர், கோவிந்தம்மாள் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

குடிபோதையில் தாயை கழுத்தை அறுத்து மகன் கொலை

பின்னர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மதுபோதையில்தான் ஆனந்தன் தாயை கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:விரைவில் திருமணம் நடைபெற வேண்டி முதியவரின் தலையை வெட்டியவர் கைது

ABOUT THE AUTHOR

...view details