தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மகள்களை அடித்தே கொன்ற குடிகாரத் தந்தை..!' : போலீசார் விசாரணை - மகள்களைக் கொன்ற குடிகாரத்தந்தை

ஒரகடம் அருகே தாயை அடித்து, அடிக்கடி தகராறு செய்த தந்தையைத் தட்டிக்கேட்ட தனது இரு மகள்களை குடிபோதையில் அடித்தே கொன்று விட்டு காவல்நிலையத்தில் சரணடைந்த கொடூர குடிகாரத் தந்தையிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

’மகள்களை அடித்தே கொன்ற குடிகாரத் தந்தை..!’ : போலீசார் விசாரணை
’மகள்களை அடித்தே கொன்ற குடிகாரத் தந்தை..!’ : போலீசார் விசாரணை

By

Published : May 20, 2022, 9:06 PM IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன மதுரபாக்கம் பகுதியில் வசித்துவந்தவர் கோவிந்தராஜ்(40)-கீதா(35) தம்பதி. இத்தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் என நான்கு பிள்ளைகள் உள்ளனர். கோவிந்தராஜ் வேலையின்றி இருந்து வந்ததாகவும் குடிபோதைக்கு அடிமையான இவர் அவ்வப்போது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாகவும் இதனால் அவ்வப்போது குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடேயே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று(மே 20) கோவிந்தராஜின் மனைவி வேலைக்குச் சென்று இருந்த நிலையில் பிற்பகல் வழக்கம் போல் கோவிந்தராஜ் குடித்துவிட்டு தள்ளாடியபடி வீட்டிற்கு வந்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த 11வகுப்பு படித்து வரும் முதல் மகள் நந்தினி(16), மற்றும் நான்காவது வகுப்பு படித்து வரும் தீபா(10) ஆகியோர் தந்தை கோவிந்தராஜிடம் அவ்வப்போது குடித்துவிட்டு, தனது தாயிடம் ’அடிக்கடி தகராறு செய்கிறாயே’ என தட்டிக்கேட்டு தந்தையிடம் சண்டையிட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரத்தில் ஏற்கெனவே குடிபோதையில் இருந்த குடிகாரத் தந்தை கோவிந்தராஜ் இரண்டு சிறுமிகளையும் அடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் சிறுமிகள் கத்தி கூச்சலிடும் சத்தம் கேட்கவே அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது மயங்கிய நிலையில் இருவரும் இருந்துள்ளனர். இதனையெடுத்து, அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்த நிலையில் அங்கு வந்தவர்கள் ஏற்கெனவே இருவரும் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் ஒரகடம் போலீசாருக்குத் தகவல் அளித்து, குடிகாரத் தந்தை கோவிந்தராஜனுக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். இதையடுத்து ஒரகடம் காவல் நிலையத்தில் குடிகாரத் தந்தை கோவிந்தராஜ் சரணடைந்துள்ளார். அதையடுத்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையுண்ட இருவரின் பிரேதங்களைக் கைபற்றி உடற்கூராய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இரண்டு சிறுமிகளைக் கொன்ற கொடூர குடிகாரத் தந்தை கோவிந்தராஜனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் வேலைக்கு சென்றிருந்த நிலையில் தனது இரண்டு மகள்களையும் தந்தையே அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அக்கிராம மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பழனி உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது தங்க‌நகைகளைத் திருடிய பெண் ஊழியர் கைது!


ABOUT THE AUTHOR

...view details