தமிழ்நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் பிப்ரவரி 16ஆம் தேதி நள்ளிரவு முதல் பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரட்டிப்பு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதியுற்று வருகின்றனர். இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், "சென்னை கோயம்பேட்டிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் சுங்கச் சாவடி வழியாக காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், பாஸ்டேக் தற்பொழுது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகளவிலான வாகனங்களில் இரட்டிப்பான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. பாஸ்டேக் இல்லாத வாகனங்களில் இரட்டிப்பான சுங்க வரி வசூல் செய்வதாலும், பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பதாலும் வாகனங்களை இயக்க முடியவில்லை. சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகனங்களை இயக்குவது சவாலாக உள்ளது.