காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும்பொருட்டு, காஞ்சிபுரம் நகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்துப் பேசிய நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, “சுகாதார அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று, வீட்டில் உள்ள அனைவருக்கும் முதலில் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்வர். பின்னர், வீட்டில் வேறு யாருக்கேனும் கரோனா தொற்று அறிகுறி உள்ளதா என்பது குறித்தும் கண்டறியும் சோதனை செய்வர்.