தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையால் நாய்களுக்கு வந்த சோதனை! - சென்னையில் தெருநாய்கள் விரட்டியடிப்பு

காஞ்சிபுரம்: மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி அப்பகுதியில் சுற்றித் திரிந்த தெருநாய்கள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

street dog

By

Published : Oct 11, 2019, 2:47 PM IST

Updated : Oct 11, 2019, 3:04 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று, நாளை இந்தியப் பிரதமரும் சீன அதிபரும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில் மாமல்லபுரம் முழுமையாக சீரமைக்கப்பட்டு விழாக்கோலமாகக் காட்சியளிக்கிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகை தந்துள்ளதையொட்டி மாமல்லபுரம் காவல் துறையினர் முழுமையாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

விரட்டியடிக்கப்பட்ட நாய்கள்

இந்நிலையில், தெருக்களில் சுற்றித் திரிந்த நாய்களை பொதுப்பணித் துறையினர் விரட்டி அடித்தனர். இதில், மிரண்டு ஓடிய தெருநாய்கள் அருகில் உள்ள கடற்கரை ஓரமாக தஞ்சமடைந்தன. மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றுவந்தாலும், விரட்டியடிக்கப்பட்ட தெருநாய்கள் கடற்கரையோர மக்களுக்கு தொல்லை கொடுத்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சீன அதிபரின் வருகையையொட்டி முன்புபோல் இல்லாத அளவிற்கு சென்னை மாநகரம் சுத்தமாக உள்ளது. அரசு சார்பில் தனியாருக்குச் சொந்தமான கட்டடங்களில் தடுப்புச் சுவர்கள், வண்ணம் தீட்டித் தரப்படுவது புதிதாக இருக்கிறது என்று மக்கள் கூறிவருகின்றனர்.

மேலும், இதேபோன்று மாதம் ஒருமுறை வெளிநாட்டுத் தலைவர்கள் வருகைதந்தால் சென்னை சொர்க்கபூமியாக மாறிவிடும் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்துவருகின்றனர்.

Last Updated : Oct 11, 2019, 3:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details