திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்த 'எல்லோரும் நம்முடன்' என்னும் இணைய வழி உறுப்பினர் சேர்க்கை முகாமை காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளருமான தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்து, புதிதாக இணைய வழியில் திமுகவில் சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
'72 மணி நேரத்தில் ஒரு லட்சம் பேரை திமுகவில் இணைத்துள்ளோம்!' - எம்.எல்.ஏ அன்பரசன் - திமுக எம்எல்ஏ அன்பரசன்
காஞ்சிபுரம்: 'எல்லோரும் நம்முடன்' என்னும் இணைய வழி உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை தொடங்கி 72 மணி நேரத்தில் சுமார் ஒரு லட்சம் பேரை கட்சியில் இணைத்துள்ளோம் என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
dmk mla