உத்திரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினர் க. சுந்தரின் அறுவுறுத்தலின்படி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினரும், கழக மாணவரணி செயலாளருமான சி.வி.எம்.பி. எழிலரசன் வழிகாட்டுதலில், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் காஞ்சிபுரம் நகர திமுக இளைஞரணியினர் பலர் ரத்த தானம் செய்தனர்.
இதற்காக, திமுக இளைஞர்கள் காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனையில், ரத்த தானம்செய்யும் பிரிவில் முகக்கவசங்களுடன் வரிசையாக நின்று ஆர்வத்துடன் ரத்த தானம்செய்தனர். தானம் வழங்கிய திமுக இளைஞர்களுக்கு மருத்துவர்கள் பாராட்டுச் சான்றிதழை வழங்கி, வாழ்த்துக் கூறினர்.