காஞ்சிபுரம்மாவட்டத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் தாமாகவே வீடு கட்டுவதற்கு பணி ஆணை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவிற்குட்பட்ட சிறு மாங்காடு ஊராட்சி மன்றத் தலைவராகவும் ஸ்ரீபெரும்புதூர் திமுக ஒன்றிய துணைச் செயலாளருமாக சுபரஞ்சனி என்பவர் செயல்பட்டு வருகிறார்.
இவருடைய கணவர் கன்னியப்பன் (39) திமுக கிளைக் கழக செயலாளராக உள்ளார். இவர் ஊராட்சி மன்றத் தலைவராகவும் பதவி வகித்தவர். வாசு (38) என்பவர், திமுக பிரதிநிதியாக உள்ளார். இவருடைய மனைவி பிலோமினா ஐந்தாவது வார்டு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.
கன்னியப்பன் மற்றும் வாசு ஆகிய இருவரும் சேர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாகப் பொறியாளரான அழகுபொன்னையாவை சந்தித்து, கடந்த 12ஆம் தேதி சிறு மாங்காடு கிராமத்தில் 19 வீடுகள் கட்டுவதற்கான பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பணி ஆணை கோப்புகள் கொடுத்துள்ளார்கள்.