காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே சென்னை - பொன்னேரிக்கரை - காஞ்சிபுரம் சாலையில், 54 கோடியே ரூபாய் செலவில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. 66 தூண்களுடன் திட்டமிடப்பட்டுள்ளஇந்தப் பாலத்திற்கான வடிவமைப்பு மற்றும் வரைபடம் தயாரிக்கப்பட்டு, கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
அதனோடு, 1 கிலோ மீட்டர் தூரம் நான்கு வழிப் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கி தற்போது 80 விழுக்காடு பணிகள் முடிவடைந்துள்ளன. 2017ஆம் ஆண்டு தொடங்கிய பணி இரண்டு வருடத்திற்குள் முடிப்பதாக திட்டமிடப்பட்டு இன்னும் முடிவடையவில்லை.