காஞ்சிபுரம் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நேற்று (டிச.8) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.
குறிப்பாக அவர் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா, சிவபுரம், காஞ்சிபுரம் தாலுகா உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள், வாழை மரங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார்.
இந்நிலையில் இன்று (டிச.9) திமுக எம்எல்ஏ எழிலரசன் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சேதத்திற்கான இழப்பீடு குறித்த மனுவை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமாரை சந்தித்து வழங்கினார்.
எம்எல்ஏ எழிலரசன் குற்றச்சாட்டு அதன்பின் செய்தியாளர்களிடம் எம்எல்ஏ எழிலரசன் கூறுகையில், "காஞ்சிபுரத்தில் மத்திய குழு, மாநில அமைச்சர்கள் ஆகியோர் முறையாக ஆய்வு செய்யவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் தர அரசு முன்வர வேண்டும்.
அறுவடை செய்த நெல் மூட்டைகளை எவ்வித நிபந்தனையின்றி அரசு கொள்முதல் செய்ய வேண்டும். அமைச்சர்கள் மேற்கொண்ட ஆய்வில் எம்எல்ஏ என்ற முறையில் என்னை அழைக்கவில்லை. பாதிக்கப்பட்ட நெசவாளர் பகுதிக்கு அவர்கள் செல்லவில்லை.
நெசவாளர்களுக்கு ஐந்து ஆயிரம் ரூபாய் இழப்பீடு அரசு வழங்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு