தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெறுகிறது. காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் எழிலரசன் இரண்டாவது முறையாக களம் காண்கிறார். இதனையடுத்து இன்று (மார்ச் 27) காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள ஜெ.ஜெ. நகர், கீழ்அம்பி, விநாயகபுரம், ஒளிமுகமது பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணிக் கட்சியினருடன் வீடு வீடாக சென்று தேர்தல் அறிக்கையை துண்டு பிரசுரமாக அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்! - திமுக வேட்பாளர் எழிலரசன்
காஞ்சிபுரம்: திமுக வேட்பாளர் எழிலரசன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ezhilarasan
முன்னதாக வாக்கு சேகரிக்க வந்த அவருக்கு 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பை அளித்தனர். மேலும் பொது மக்களுக்கு முகக்கவசங்கள், கிருமி நாசினிகளை எழிலரசன் வழங்கினார். இந்த வாக்கு சேகரிப்பின்போது விசிக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட ஏராளமான கூட்டணி கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் என ஏராளமானோர் உடனிருந்தனர்.