உத்திரமேரூர் தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரத்தை ஆதரித்து, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”எதிர்க்கட்சியாக செயல்படாமல் தமிழக மக்களுக்கே எதிரிக்கட்சியாக திமுக செயல்படுகிறது. எனவே, அதிமுக அரசின் வளர்ச்சி திட்டங்கள் தொடர வேண்டுமா வேண்டாமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்.
தமிழக மக்களுக்கே எதிரி திமுக! - ஜி.கே.வாசன் - தமிழ் மாநில காங்கிரஸ்
காஞ்சிபுரம்: எதிர்க்கட்சியாக செயல்படாமல் தமிழக மக்களுக்கே எதிரிக்கட்சியாக திமுக செயல்படுவதாக தமாகா தலைவர் ஜி.கே. வாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
vasan
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது அதிமுக அரசு. அதிமுக அரசு மீதான வடிக்கட்டிய பொய்களை பேசிவரும் திமுகவிற்கு இந்த தேர்தலோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: 'ஒவ்வொருவரின் தலையிலும் ரூ.1 லட்சம் கடன்சுமை இருப்பதே அரசின் சாதனை'