தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் கூட்டத்தில் திமுக நிர்வாகிக்கு மாரடைப்பு; ஆம்புலன்சில் உயிரிழப்பு - திமுக எம்பி டி ஆர் பாலு

திமுக பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்ட திமுக நிர்வாகி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திமுகவினரிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்சில் உயிரிழப்பு
ஆம்புலன்சில் உயிரிழப்பு

By

Published : Feb 12, 2022, 1:15 PM IST

காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காஞ்சிபுரம் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினம்(பிப்.12) பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக பொருளாளரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி. சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரப்புரையில் ஈடுபட்டார்.

திமுக தேர்தல் பரப்புரை கூட்டம்

அதன் ஓர் பகுதியாக காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெரு பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றக் பிரச்சார கூட்டத்தில் டி.ஆர்.பாலு பங்கேற்று வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துக்கொண்ட பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி சந்தானம் (67) திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அதையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தும் அவருக்கு முதலுதவி அளித்தும் அவரை மீட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

திமுக நிர்வாகிக்கு மாரடைப்பு

இது குறித்து சிவகாஞ்சி காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுகவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற திமுக நிர்வாகி மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியிலும், திமுகவினரிடையேயும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திமுக நிர்வாகி உயிரிழப்பு

இதையும் படிங்க:IPL MEGA AUCTION 2022: ரூ.12.25 கோடிக்கு கேகேஆரில் ஷ்ரேயஸ்!

ABOUT THE AUTHOR

...view details