காஞ்சிபுரம்:செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்துவருகிறார். அவரை வரவேற்கும் வகையில் இரண்டு மாவட்டங்களின் சாலைகளிலும் பேனர்கள் மற்றும் கட் அவுட்கள், தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்பை மீறி, அதிமுகவினர் பேனர் வைத்துள்ளதாகவும், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் காஞ்சிபுரம் மாவட்ட வடக்கு மண்டல திமுக செயலாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ள அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.