காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எழிலரசன், காரை, பொன்னேரிக்கரை, காரப்பேட்டை, வையாவூர் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்டார்.
காரை கிராமத்தில் பரப்புரை மேற்கொண்டிருந்தபோது பேருந்தில் ஏறிச் சென்று திமுக தேர்தல் அறிக்கை துண்டு பிரசுரங்களை மக்களிடம் விநியோகித்தார்.