17வது மக்களவைத் தேர்தல் நடைபெற மூன்று நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட திமுகவினர் காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் பயணிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர்! - சட்டமன்ற உறுப்பினர்
காஞ்சிபுரம்: திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் தலைமையில் ரயில் பயணிகளிடம் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வத்திற்கு ஆதரவாகத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
புதிய இணைப்பு பெட்டிகள், கூடுதல் ரயில் சேவைகள் உள்ளிட்டவைகளை திமுக சார்பில் தென்னக ரெயில்வேக்கு கோரிக்கை வைத்து அதை நிறைவேற்றியதை சுட்டிக் காட்டியும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரயில் பாதை பணிகளை விரைவில் முடிக்க கோரி மனுக்கள் அளித்தது என பல்வேறு வகையில் திமுக செயல்படுவதை சுட்டிக்காட்டியும் வாக்கு சேகரித்தனர்.
இந்நிகழ்வில், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகர், முன்னாள் காஞ்சி நகர்மன்ற உறுப்பினர் ஜெகநாதன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.