பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த கட்சித் தலைமை உத்தரவிட்டிருந்தது.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தேமுதிக மகளிர் அணியினர் சமையல் எரிவாயு சிலிண்டரை பாடைகட்டி கொண்டுவந்து சாலையில் ஒப்பாரி வைத்தும், கட்சி நிர்வாகிகள் டயர்களை உருட்டி வந்தும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.